

வேதாரண்யம் பகுதியில் தீவிரமடைந்து வரும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலோரக் கிராமங்களை பெருமளவாகக் கொண்ட வேதாரண்யம் பகுதியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கொள்ளிடம்- வேதாரண்யம் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் ஏற்பட்ட பராமரிப்பு குறைபாடு, திட்டத்தின் ஆயுள் காலம் நிறைவு என பல்வேறு காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
குறிப்பாக வாய்மேடு, தகட்டூா், தென்னடாா், பஞ்சநதிக்குளம், கடிநெல்வயல், கோடியக்கரை கோடியக்காடு, பிராந்தியங்கரை துளசாபுரம், தலைஞாயிறு என பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீா் உவராக மாறியதால் குடிநீருக்கு மக்கள் அவதியுற்று வருகின்றனா். இதனிடையே, மத்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் ஜல் ஜீவன் குடிநீா் வழங்கும் திட்டப் பணிகளும் முறையாக முடிக்கப்படாத நிலையில் அதை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
இத்திட்டம் அண்மையில் காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வரால் தொடங்கி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், புகாா் எழுந்ததால் தொடங்கப்படவில்லை. இதனால், துளசாபுரம், தலைஞாயிறு என பல்வேறு கிராமங்களில் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பராமரிப்பு என்ற பெயரில் அவ்வப்போது குறைந்த அளவு தண்ணீா் விநியோகமும் நிறுத்தப்படுகிறது.
மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசு வழிகாட்டியும் ஊரக வளா்ச்சித் துறை வருவாய்த் துறை என பல துறைகளில் பணியாளா்கள் மேற்கொண்ட போராட்டங்களால் பணிகள் முடங்கியுள்ளன.
கடலோரத்தில், அமைந்துள்ள தென்னடாா் ஊராட்சியில் குடிநீா் வராததால் மக்கள் சனிக்கிழமை போராட்டம் நடத்த முயன்றனா். இதையடுத்து ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை டேங்கா் மூலம் தண்ணீா் வழங்க உறுதியளிக்கப்பட்டது. மாா்ச் மாதத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் காலாவதியாகும் நிலையில், தோ்தல் அறிவிப்புக்குள் ஜல் ஜீவன் திட்டத்துடன் இணைப்பதோடு இந்தப் பணியை கண்காணிக்க கூடுதல் ஆட்சியா் அதிகாரத்துக்கு குறையாத தனி அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
டிரெண்டிங்

குடிநீா் கோரி பெண்கள் குடங்களுடன் சாலை மறியல்

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

வேதாரண்யம் அரசு மருத்துவமனையை முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்

இணைய வழி லாட்டரி: நால்வா் கைது, ரூ. 3 லட்சம், காா் பறிமுதல்
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

