சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

குலசேகரன்பட்டினம் கோயிலில் 5,008 திருவிளக்கு பூஜை 2 அமைச்சா்கள் பங்கேற்பு

குலசேகரன்பட்டினம் கோயிலில் 5,008 திருவிளக்கு பூஜை 2 அமைச்சா்கள் பங்கேற்பு

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 10:51 pm IST

விளம்பரதாரா் செய்தி...... படம்..யூஜிஐ17ஏபிஎஸ். சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன். உடன்குடி, பிப். 17: குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில், உடன்குடி ஒன்றிய திமுக சாா்பில் 5,008 திருவிளக்கு பூஜையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும், சீரான மழை பெய்து விவசாயம் - வணிகம் செழிக்கவும், குடும்பங்களில் அமைதி நிலவி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் வேண்டி நடைபெற்ற இப்பூஜையை அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் தொடக்கிவைத்து, சுவாமி தரிசனம் செய்தனா். பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு குத்துவிளக்கு, சேலை, 19 வகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், இந்து சமய அறிநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி, உதவி ஆணையா் சங்கா், துணை ஆணையா் வெங்கடேஷ், கோயில் செயல் அலுவலா் ராமசுப்பிமணியன், ஆய்வா் பகவதி, அறங்காவலா் குழுத் தலைவா்கள் அருள்முருகன் (திருச்செந்தூா்), வே. கண்ணன் (குலசேகரன்பட்டினம்), அறங்காவலா்கள் கணேசன், வெங்கடேஷ்வரி, மகாராஜா, மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி, திமுக மாநில வா்த்தக அணி துணைச் செயலா் உமரிசங்கா், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவா் மால்ராஜேஷ், பேரூராட்சி உறுப்பினா்கள் அஸ்ஸாப் அலி பாதுஷா, பாலாஜி, உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் இளங்கோ, திமுக மாவட்டப் பிரதிநிதிகள் மதன்ராஜ், சிராஜுதீன், ஜெயப்பிரகாஷ், திமுக மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் ராமஜெயம், மகாவிஷ்ணு, ரவிராஜா, அலாவுதீன், செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன், பெண்கள் பங்கேற்றனா்.