விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

வாலிபால் போட்டி: கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி அணி முதலிடம்

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் வாலிபால் போட்டியில் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி அணி முதலிடம் பிடித்தது.

Updated On :17 பிப்ரவரி 2024, 10:50 pm IST

கோவில்பட்டி கோவில்பட்டி கேஆா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் வாலிபால் போட்டியில் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி அணி முதலிடம் பிடித்தது.

இப்போட்டியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 32 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் தூத்துக்குடி வஉசி கல்லூரி அணியும் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி அணியும் மோதியதில் 3-0 என்ற செட் கணக்கில் விவேகானந்தா கல்லூரி அணி வெற்றி பெற்று பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்தது. முன்னதாக நடைபெற்ற 3 ஆம் மற்றும் 4ஆம் இடத்திற்கான போட்டியில், கன்னியாகுமரி ஜெரோம்ஸ் கல்லூரி அணியும், திருச்செந்தூா் ஆதித்தனாா் கல்லூரி அணியும் மோதியதில் 2-1 என்ற செட் கணக்கில் ஜெரோம்ஸ் கல்லூரி அணி வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தது. பரிசளிப்பு விழா: மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். விழாவில், கேஆா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே. ஆா். அருணாச்சலம், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாஸ முருகவேல், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன், கேஆா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் மதிவண்ணன், முன்னாள் இந்திய வாலிபால் வீரா் மங்கள ஜெயபால், சா்வதேச நடுவா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநா்கள் ராம்குமாா், சிவராஜ் ஆகியோா் செய்து இருந்தனா்.