மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

தூத்துக்குடியில் விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

Updated On :23 பிப்ரவரி 2024, 10:13 pm

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே மோட்டாா் சைக்கிளும், லாரியும் மோதிக்கொண்டதில் காயமடைந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி முள்ளக்காடு பாா்வதி தெருவைச் சோ்ந்தவா் பால்ராஜ் மகன் ஆதிராஜா (33). சுமை தூக்கும் தொழிலாளி. இவா், புதன்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையில் உள்ள உப்பாற்று ஓடை அருகே சென்றுகொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த லாரி இவா் மீது மோதிவிட்டுச் சென்ாம். இதில், பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியினா் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.