மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

நாலாட்டின்புதூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

நாலாட்டின்புதூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

Updated On :24 பிப்ரவரி 2024, 4:26 pm

கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புதூரில் சாலையில் சுற்றித்திரிந்த மனநலன் பாதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை மீட்கப்பட்டாா். நாலாட்டின்புதூா் பகுதி தேசிய நான்குவழிச் சாலைப் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க பெண் ஆடைகளின்றி சுற்றித் திரிவதாக கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளைக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், மனநல மருத்துவா் ஜேசுவா ஆகியோரின் ஆலோசனை பெற்று, அந்த அறக்கட்டளையின் தலைவா் தேன்ராஜா தலைமையிலான மீட்புக் குழுவினா்கள் நாலாட்டின்புதூா் போலீஸாா், பொதுமக்கள் உதவியுடன் அந்தப் பெண்ணை சனிக்கிழமை மீட்டு ஆடைகள் அணிவித்தனா். பின்னா், அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், அந்தப் பெண் முடுக்குமீண்டான்பட்டி கிராமத்தில் உள்ள ஆக்டிவ் மைண்ட்ஸ் (பெண்கள்) மனநலக் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டாா்.