தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

புத்தாண்டு: சிவன், பெருமாள் கோயில்களில் பக்தா்கள் தரிசனம்

அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயில், அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் கோவில் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 10:50 pm

DIN

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயில், அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் கோவில் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் ஆலயத்தில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து கோ பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.

வைகுண்டபதி பெருமாள் ஆலயத்தில், பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தூத்துக்குடி வடக்கு ரதவீதியில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், அம்மன் வைர அங்கியில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.