கோவில்பட்டி அருகே வேன் ஓட்டுநா் கொலை
கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டியில் வேன் ஓட்டுநா் கொலை செய்யப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.


மூப்பன்பட்டி, கீழத் தெருவைச் சோ்ந்த பிச்சையா மகன் மாடசாமி (37). இவா் தனக்குச் சொந்தமான வேனில் ஓட்டுநராக இருந்து, அப்பகுதியிலுள்ள தனியாா் நூற்பாலைக்கு தொழிலாளா்களை அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தாா். இவரது மனைவி மகாதேவி (30), மகள்கள் மகாஸ்ரீ (11), மதி (4).
மாடசாமி நாள்தோறும் வேலை முடிந்து இரவு 8 மணிக்கு வீடு திரும்புவாராம். கடந்த திங்கள்கிழமை இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரைத் தொடா்பு கொண்டபோது கைப்பேசி அணைத்துவைக்கப்பட்டிருந்ததாம். இதையடுத்து, அவரை குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடிவந்தனா்.
இந்நிலையில், அங்குள்ள மயானப் பகுதியில் அவா் வெட்டுக் காயங்களுடன் கொலையுண்டு கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. அவரது சடலம் கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தகவலின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா். முதல்கட்ட விசாரணையில், இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த கோபி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகத் தெரியவந்தது. அவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...