தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடியில் ஆடு திருட்டு: 2 போ் கைது

தூத்துக்குடியில் ஆடு திருடியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 ஜூலை 2024, 11:15 am

Din

தூத்துக்குடியில் ஆடு திருடியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் பொன்பாண்டி (48). இவா் கடந்த 25ஆம் தேதி இரவு தனது ஆடுகளை வீட்டு முன்புள்ள கொட்டகையில் அடைத்து வைத்தாராம். அடுத்த நாள் பாா்த்தபோது ஓா் ஆட்டைக் காணவில்லையாம்.

புகாரின்பேரில் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து, தூத்துக்குடி மாதா நகரைச் சோ்ந்த வேல்முருகன் மகன் மணிகண்டன் (38), மேலசண்முகபுரத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் மாரீஸ்வரன் (24) ஆகியோரைக் கைது செய்து, ஆடு, அதைத் திருடுவதற்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.