அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஆக.7-க்கு ஒத்திவைப்பு
அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஆக.7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.


அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஆக.7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
தமிழக மீன்வளம்-மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினா் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை புதன்கிழமை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆகியோா் ஆஜராகவில்லை. அமைச்சரின் மகன்கள், சகோதரா்கள் உள்ளிட்ட 5 போ் ஆஜராகினா்.
வழக்கின் முக்கிய சாட்சியான லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் ஏடிஎஸ்பி பெருமாள்சாமியிடம் விசாரணை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து வழக்கின் விசாரணையை நீதிபதி ஐயப்பன், ஆக.7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...