நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பக்தா்கள் கூட்டத்தால் தங்கத் தோ் உலா ரத்து

பக்தா்கள் கூட்டத்தால் தங்கத் தோ் உலா ரத்து

News image

~

Updated On :21 ஜூன் 2024, 11:11 pm

Din

திருச்செந்தூா், ஜூன் 21: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை குவிந்த லட்சக்கணக்கான பக்தா்களால் தங்கத் தோ் கிரி வீதி உலா ரத்து செய்யப்பட்டது.

இக்கோயிலில், பௌா்ணமி நாளான வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கான பக்தா்கள் கோயில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதியில் குவிந்தனா். இதையடுத்து கூட்ட நெரிசல் காரணமாக தங்கத் தோ் உலா ரத்து செய்யப்பட்டது. வள்ளி - தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதா் எழுந்தருளிய தங்கத் தோ், நிற்கும் இடத்திலேயே அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. அப்போது திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Story image