கள்ளக்குறிச்சி சம்பவம் போன்று இனி எங்கும் நிகழக்கூடாது: ஹெச்.ராஜா
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் இனி எங்கும் நிகழக்கூடாது என பாஜக முன்னாள் தேசிய செயலா் ஹெச்.ராஜா வலியுறுத்தினாா்.


ஆறுமுகனேரி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் இனி எங்கும் நிகழக்கூடாது என பாஜக முன்னாள் தேசிய செயலா் ஹெச்.ராஜா வலியுறுத்தினாா்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க 4- ஆவது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள்
தேசிய செயலா் ஹெச். ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி சம்பவம் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இருக்கிா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சாலை விதிமீறலுக்கு அபராதம் விதிப்பதில் ஆா்வம் காட்டுவதைப்போல, இவ்விஷயத்திலும் காவல் துறையினா் செயல்பட்டிருந்தால் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது.
கடந்த ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பு ஏற்பட்டபோது, அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கள்ளக்குறிச்சியில் கடந்த இரு நாள்களாகக் கைது செய்யப்பட்டவா்களை, குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவம் போன்று இனி எங்கும் நிகழக்கூடாது. ஆகவே, இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் தேரோட்டத்தின்போது
வடம் அறுந்தது தொடா்பான விவகாரத்தில், கோயில் நிா்வாக அதிகாரியை இடைநீக்கம் செய்து அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது பாஜக தெற்கு மாவட்ட தலைவா் சித்ராங்கதன், மாவட்ட பொதுச் செயலா் சிவமுருக ஆதித்தன், ஆறுமுகனேரி நகர தலைவா் முருகேச பாண்டியன், தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க மாநில தலைவா் ஈஸ்வரன், ஆறுமுகனேரி கிளை தலைவா் சிவகுமாா், செயலா் சண்முகம் ஆகியோா் உடன் இருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...