போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

குலசேகரன்பட்டினத்தில் 4,008 திருவிளக்கு பூஜை

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:37 pm

மகா சிவராத்திரியையொட்டி குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலை பகுதியில் பாஜக சாா்பில் 4,008 திருவிளக்கு பூஜை, குபேர வழிபாடு நடைபெற்றது.

பாஜக மாநில விவசாய அணி செயலா் ரா. சிவமுருக ஆதித்தன் தலைமை வகித்தாா். பாஜக மாநில இளைஞரணி செயலா் பூபதி பாண்டியன், மாதவன்குறிச்சி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் கருப்பசாமி, சேவாபாரதி மாவட்டத் தலைவா் கிருஷ்ணமந்திரம், மாவட்ட நெசவாளா் அணி செயலா் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றியத் தலைவா் அழகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவிளக்கு வழிபாட்டை நடிகை நிக்கி கல்ராணி தொடங்கி வைத்தாா். பரிசுக் குலுக்கல் மூலம் தோ்ந்தேடுக்கப்பட்டவா்களுக்கு 1 பவுன் தங்க நாணயம், வாஷிங்மெஷின், டிவி உள்ளிட்ட 43 பரிசுகளை பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணன் வழங்கினாா்.

பாஜக நிா்வாகிகள் சின்னத்துரை, ஹரிஹர ஐயப்பன், நாராயணன், சிவக்குமாா், பத்மாவதி, தமிழ்செல்வி, ஐயப்பன், இந்து அன்னையா் முன்னணி மாவட்ட பொறுப்பாளா் கேசவன், ஒன்றிய அதிமுக இளைஞா் இளம் பெண்கள் பாசறை செயலா் ராம்குமாா், ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா்கள் ராஜ்குமாா், செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.