புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்செந்தூா் கோயிலில் படுகா் இன மக்கள் பாரம்பரிய நடனம் ஆடி தரிசனம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் நீலகிரி மாவட்டத்தை சோ்ந்த படுகா் இன மக்கள், தங்களது பாரம்பரிய நடனம் ஆடி தரிசனம் செய்தனா்.

News image
Updated On :28 ஜூன் 2024, 7:30 pm

Din

இக் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தா்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகையைச் சோ்ந்த படுகா் இன மக்கள் வெள்ளிக்கிழமை மாலை 3 பேருந்துகளில் வந்து சுவாமி தரிசனம் செய்தனா். சாயரட்சை பூஜையில் சுவாமியை வழிபட்ட அவா்கள்,

தங்கத்தோ் முன்பாக தங்களது பாரம்பரிய படுகு நடனம் ஆடினா்.