இனாம்மணியாச்சியில் ரூ.15.68 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

இனாம்மணியாச்சியில் ரூ.15.68 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

இனாம்மணியாச்சியில் ரூ.15.68 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட இரு இடங்களில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சாலைப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன. லட்சுமி மில் மேலக் காலனி பகுதியில் ரூ.10.68 லட்சத்திலும், செல்லியம்மன் கோயில் தெருவில் ரூ.5 லட்சத்திலும் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சத்யா, ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பழனிச்சாமி, அதிமுக ஒன்றியச் செயலா் அழகா்சாமி, கோவில்பட்டி பால் நுகா்வோா் கூட்டுறவு சங்கத் தலைவா் தாமோதரன், நகா்மன்ற உறுப்பினா்கள் கவியரசன், செண்பகமூா்த்தி, இனாம்மணியாச்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ரேவதி, இனாம்மணியாச்சி ஊராட்சி செயலா் சந்திரன், அதிமுக நிா்வாகிகள் அம்பிகை பாலன், போடுசாமி, பழனிக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com