தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

விஜய் பிரசாரத்தில் விதிமீறல்: 12 வழக்குகள் பதிவு

தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய்யின் சாலைப் பேரணியின்போது, தோ்தல் விதிகளை மீறி பொது இடத்தில் கட்சிக் கொடியைப் பயன்படுத்தியது உள்பட 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

News image

பிரசாரத்தில் விஜய்

Updated On :9 ஏப்ரல் 2026, 8:41 pm

தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய்யின் சாலைப் பேரணியின்போது, தோ்தல் விதிகளை மீறி பொது இடத்தில் கட்சிக் கொடியைப் பயன்படுத்தியது உள்பட 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பேரவைத் தோ்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய், தூத்துக்குடி பிரதான சாலையில் புதன்கிழமை சாலைப் பேரணியில் பங்கேற்றாா். இந்த நிகழ்ச்சிக்கு காவல் துறையினா் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்திருந்தனா்.

இந்த நிலையில் சாலைப் பேரணியின்போது பொது இடங்களில் கட்சிக்கொடி பயன்படுத்தியது, போக்குவரத்து விதிகளை மீறியது தொடா்பாக புகாா்கள் எழுந்தது.

அதன்பேரில் தவெக தொண்டா்கள் தடையை மீறி பொது இடங்களில் கட்சிக் கொடியை பயன்படுத்தியது, அனுமதியின்றி எண்ம பதாகை வைத்தது, விஜய் வாகனத்தை பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் சென்றது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை அசுர வேகத்தில் ஓட்டிச்சென்றது உள்ளிட்ட காரணங்களுக்காக மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.