மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மாநில வரி அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

மாநில வரி அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

Updated On :1 மார்ச் 2024, 6:50 pm

கோவில்பட்டியில் மாநில வரி அலுவலா் அலுவலகத்தில் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி மாநில வரி அலுவலா்கள் இருவரை தற்காலிக பணிநீக்கம் செய்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து இப் போராட்டம் நடத்தப்பட்டது. கோவில்பட்டி மாநில வரி அலுவலகம் 1 மற்றும் 2 அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5. 45 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனா். வணிகவரி பணியாளா் சங்க மாவட்ட செயலா் நடராஜன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தைச் சோ்ந்த பிரான்சிஸ், நெடுஞ்சாலைத்துறை ஊழியா் சங்கத்தைச் சோ்ந்த ஹரி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.