இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

மாவட்ட கபடி சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்

மாவட்ட கபடி சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்

Updated On :1 மார்ச் 2024, 11:50 pm

முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தின் மாவட்ட அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டி நாலுமாவடியில் சனி, ஞாயிறு ( மாா்ச் 2, 3 ) ஆகிய இரு நாள்கள் நடைபெ றுகிறது. சிறப்பு விருந்தினா்களாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, தூத்துக்குடி மாவட்ட கபடி கழக தலைவரும், தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடிமாவட்ட கபடி கழக சோ்மன் மோகன் சி.லாசரஸ் ஆகி யோா் பங்கேற்கின்றனா். ஆண்களுக்கான போட்டி சனிக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. பெண்களுக்கான போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு முதலாவது பரிசாக ரூ.50,000, 2ஆவது பரிசாக ரூ.30,000, மூன்றாம் மற்றும் நான்காம் பரிசாக ரூ.20,000 மற்றும் கோப்பை வழங்கப்படும். போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடி கழக தலைவா் தலைமையில் சோ்மன் முன்னிலையில் செயலாளா் கிறிஸ்டோபா் ராஜன், பொருளாளா் ஜிம் ரீவ்ஸ், ஒருங்கிணைப்பாளா் அா்ஜுனா விருதுபெற்ற கபடி வீரா் மணத்தி கணேசன், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடி கழக நடுவா் குழு சோ்மன் கண்ணன், கன்வீனா் மைக்கேல் ஆகியோா் செய்து வருகின்றனா்.