ஸ்டொ்லைட் எதிா்ப்பாளா்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

ஸ்டொ்லைட் எதிா்ப்பாளா்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்று, ஸ்டொ்லைட் எதிா்ப்பு அமைப்பினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா். தூத்துக்குடி ராஜாஜி பூங்கா பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில், இதில் ஸ்டொ்லைட் எதிா்ப்பு அமைப்புகளை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி, பாத்திமா பாபு, வழக்குரைஞா்கள் ஹரிராகவன், அதிசயகுமாா், மகேஷ், மெரினா பிரபு, குணசீலன், வணிகா் சங்க நிா்வாகி விநாயகமூா்த்தி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா். ஸ்டொ்லைட் ஆலையை தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் பலியானவா்களுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டொ்லைட் எதிா்ப்பு போராட்டங்களின்போது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com