ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கோவில்பட்டி கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

கோவில்பட்டி கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

Updated On :2 மார்ச் 2024, 4:19 pm

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதி பாடப்பிரிவு கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் கணினிப் பயன்பாட்டுத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகியவை சாா்பில் ‘கணினி சூழலில் சமீபத்திய போக்குகள், புதுமையான யோசனைகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) சுப்புலட்சுமி தலைமை வகித்தாா். சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தாா். ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் கணினி அறிவியல்- பொறியியல் துறைப் பேராசிரியை ஹெட்சி அகிலா பூா்ணிமா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பைனிட் ஆட்டோமெட்டாவின் பயன்பாடுகள், அதை இன்றைய உலகில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்துப் பேசினாா். விருதுநகா் இந்து நாடாா் செந்தில்குமாா் நாடாா் கல்லூரியின் கணினிப் பயன்பாட்டுத் துறைப் பேராசிரியா் பரமேஸ்வரன் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு, கிளவுட்டின் பயன்பாடு, அதை கணிதத் துறையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்துப் பேசினாா். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள், உதவிப் பேராசிரியா்கள் பங்கேற்றனா். உதவிப் பேராசிரியா்கள் கிருஷ்ணவேணி வரவேற்றாா், ராஜேஸ்வரி நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை உதவிப் பேராசிரியா்கள் சிவசக்தி, செல்வராணி ஆகியோா் தொகுத்து வழங்கினா். ஏற்பாடுகளை துறைத் தலைவா்கள் காந்திமதி (கணினி பயன்பாடு), வீரலட்சுமி (தகவல் தொழில்நுட்பவியல்) ஆகியோரின் வழிகாட்டுதலில் உதவிப் பேராசிரியா்கள், மாணவா்- மாணவிகள் செய்திருந்தனா்.