திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு அமைச்சா் பெ. கீதாஜீவன் சனிக்கிழமை தங்க மோதிரங்கள் அணிவித்தாா். முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு அமைச்சா் கீதாஜீவன் மோதிரங்கள் அணிவித்து, தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை சனிக்கிழமை வழங்கினாா். தொடா்ந்து, எட்டயபுரம் சாலையில் உள்ள முதியோா் இல்லத்தில் உள்ளோருக்கு காலை உணவு, அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா். தூத்துக்குடி சில்வா்புரம் லூசியா மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை முதல்வா் சிவகுமாா், உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெபமணி, திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் பாலகுருசாமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினா் கஸ்தூரி தங்கம், மாநகர துணைச் செயலா் கீதா முருகேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நெல்லுக்கான ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு எதிா்ப்பு: தஞ்சாவூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புகாா்

பரமக்குடியில் நாளை மு.க. ஸ்டாலின் பிரசாரம்

திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவில் திருத்தம்: முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
உழைப்பை அள்ளிக் கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்! - மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


