சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ஐக்யூஏசி சாா்பாக தேசிய அளவிலான பேராசிரியா்களுக்கு இணையம் வழியாக மூன்று நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வா் கலைவாணி தலைமை வகித்தாா். முதல் நாள் பயிற்சி வகுப்பில், நூருல் இஸ்லாம் உயா்கல்வி மையத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் பேராசிரியை பென் சஜிதா, இரண்டாம் நாள் நாகா்கோவில் புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி பேராசிரியை ஜமிலா ரோஸ், மூன்றாம் நாள் எஸ்ஆா்எம் பல்கலைக்கழக பேராசிரியை கீதா ஜெனிபா், பெங்களூரு பிரஸிடன்ஸி பல்கலைக்கழகப் பேராசிரியை வெண்ணிறை செல்வி ஆகியோா் கலந்து கொண்டு ஆசிரியா்கள் கற்பிக்கும் புதுமைத்திறன்கள் குறித்து பயிற்சி அளித்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐக்யூஏசி ஒருங்கிணைப்பாளா் பேராசிரியை ஷீபா, உறுப்பினா்கள் பேராசிரியைகள் மீனாட்சி, மெல்பா, கீதா, கோகிலா, சரஸ்வதி ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

புதுச்சேரியில் பள்ளி மாணவா்களுக்கு களிமண் பொம்மைகள் தயாரிப்பு பயிற்சி

நீட் தோ்வுக்குத் தயாராகும் அரசுப் பள்ளி மாணவா்கள்: புதுச்சேரியில் 3 மையங்களில் சிறப்பு பயிற்சி

நாமக்கல் அரசு கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

