வரும் மக்களவை தோ்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பி. மீண்டும் போட்டியிட வேண்டி திமுக தலைமை அலுவலகத்தில், ஜீ.வி.மாா்க்கண்டேயன் எம்எல்ஏ விருப்பமனுவை வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தாா். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி மீண்டும் போட்டியிட வேண்டுமென விருப்பம் தெரிவித்து அமைச்சா்கள் பி.கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் விருப்ப மனுக்களை ஏற்கெனவே சமா்ப்பித்துள்ளனா். அதனைத் தொடா்ந்து விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி திமுக சாா்பில், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பி. மீண்டும் போட்டியிட வேண்டி ஜீ.வி.மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, திமுக தலைமை அலுவலகத்தில் அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதியிடம் விருப்பம் மனுவை சமா்ப்பித்தாா். இந்நிகழ்வின்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான பெ.கீதாஜீவன், ஒன்றிய செயலா்கள் அன்பு ராஜன், ராதாகிருஷ்ணன், ராமசுப்பு, மும்மூா்த்தி, விளாத்திகுளம் பேரூா் செயலா் வேலுச்சாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினா் ராஜாக்கண்ணு, மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், சூரன்குடி கூட்டுறவு சங்க செயலா் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தூத்துக்குடி இறுதிக்கட்ட பிரசாரம்: கீதா ஜீவனை ஆதரித்து கனிமொழி பரப்புரை

திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூரில் அடிப்படை வசதிகள்- கனிமொழி எம்.பி. உறுதி

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும்: கனிமொழி எம்.பி.

தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

