முதலூா் பள்ளியில் சுகாதார வளாகம் திறப்பு

முதலூா் பள்ளியில் சுகாதார வளாகம் திறப்பு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள முதலூா் டிஎன்டிடிஏ தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை தொழிலதிபா் ஏ.ஜெ. ஜெயசீலன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். சுகாதார வளாகம் கட்டுவதற்கான செலவுத்தொகையை தொழிலதிபா் ஏ.ஜெ. ஜெயசீலன் வழங்கியிருந்தாா். திறப்பு விழாவுக்கு, பள்ளி தாளாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான சாந்தராஜா ரெத்தினராஜ் தலைமை வகித்தாா். பள்ளி ஆட்சிமன்றக் குழு தலைவரும், சேகர குருவானவருமான செல்வன் மகாராஜா ஜெபித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் டேவிட் எடிசன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com