பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தூத்துக்குடி சிவன் கோயிலில் சிவராத்திரி விழா

தூத்துக்குடி சிவன் கோயிலில் சிவராத்திரி விழா

News image
Updated On :8 மார்ச் 2024, 10:50 pm

தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிவராத்திரி விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். இவ்விழாவையொட்டி, கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமிக்கு தஞ்சை பிரகதீஸ்வரா் கோலத்தில் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், சுவாமிக்கும், நந்தி பகவானுக்கும் பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுவாமி - அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து மகா சிவராத்திரி முன்னிட்டு அதிகாலை 5 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் தமிழ்செல்வி, தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா், பெருமாள் கோயில் அறங்காவல் குழுத் தலைவா் செந்தில்குமாா், சிவன் கோயில் அறங்காவல் குழுத் தலைவா் கந்தசாமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.