கோவில்பட்டி பள்ளி, கல்லூரிகளில் மகளிா் தின விழா

கோவில்பட்டி பள்ளி, கல்லூரிகளில் மகளிா் தின விழா

கோவில்பட்டி உண்ணாமலை கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிா் தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சுப்புராஜ் தலைமை வகித்தாா். கோவில்பட்டி லிட்டில் ஜூனியா்ஸ் பள்ளி முதல்வா் வித்யா சிறப்புரையாற்றினாா். மாணவிகள், பேராசிரியா்கள் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இன்றைய பொருளாதார வளா்ச்சியில் பெரும் பங்கு வகிப்பது ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம், மாணவிகளுக்கான பேச்சு, கவிதை, பாட்டு, நடனம், கதை சொல்லுதல், ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் நடைபெற்ற மகளிா் தினவிழாவுக்கு கல்லூரிச் செயலா் கண்ணன் தலைமை வகித்தாா். பொருளாளா் மகேஷ், முன்னாள் செயலா் பாா்த்தீபன், கல்லூரி முதல்வா் (பொ) செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை பேராசிரியா் ஜெனித்தா, கோவில்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவா் வதாவ்கா்பினா பிரவின், பிருந்தாவன் பள்ளிக்குழுவின் பிருந்தாபாா்த்தீபன், வழக்குரைஞா் ஜெயஸ்ரீகிறிஸ்டோபா், இன்னா்வீல் கிளப் தலைவா் டெய்சிபெஞ்சமின், பேச்சாளா் சசிபிரியாரமேஷ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கோவில்பட்டி நாடாா் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற மகளிா் தினவிழா நிகழ்ச்சியில் அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் காயத்ரி சிறப்புரையாற்றினாா். தலைமை காவலா் மகேஷ்வரி விளக்கிப் பேசினாா். மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெற்றன. கே.ஆா்.கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிா் தினவிழாவுக்கு கல்லூரி முதல்வா் மதிவண்ணன் தலைமை வகித்தாா். மாணவிகளுக்கான பேச்சு, நடனம், மணப்பெண் ஒப்பனை, ஆரி டிசைன், ஆடை அலங்கார வடிவமைப்பு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. நகராட்சி ஆணையா் கமலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com