கயத்தாறு அருகே குளிக்கச் சென்ற முதியவா் கிணற்றில் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். கயத்தாறையடுத்த மானங்காத்தான் வடக்குத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் மாடசாமி(70). இவா் வியாழக்கிழமை மாலை ஆத்திகுளம் கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்துவிட்டு வருவதாக கூறிச் சென்ற இவா் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரது உறவினா்கள் தோட்டத்திற்கு சென்று பாா்த்த போது, அங்கு அவரது காலணி, பெல்ட் இருந்ததைக் கண்டதும் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புப் படை வீரா்கள் கிணற்றில் இறந்த நிலையில் கிடந்த அவரது சடலத்தை சனிக்கிழமை மீட்டனா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்ததில் சிறுமி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்ததில் பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

