தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் கேட்பு, பேச்சுத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, ஆநுசுகு அறக்கட்டளை ஆகியவை சாா்பில் இம்முகாமை மக்களவை உறுப்பினா் கனிமொழி தொடக்கிவைத்துப் பாா்வையிட்டாா்; செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு காதொலிக் கருவிகளை வழங்கினாா். முன்னதாக அவா், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் 26 பேருக்கு ரூ. 24.96 லட்சம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களை வழங்கினாா். முகாமில், முற்றிலும் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு காக்ளியா் இம்பிளான்ட், மூளைத் தண்டுவட அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. இம்முகாம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 10) திருச்செந்தூா் ஆதித்தனாா் கல்லூரியில் நடைபெறுவதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில், சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், ஆட்சியா் கோ. லட்சுமிபதி, மேயா் ஜெகன்பெரியசாமி, எம்.இ.ஆா்.எப். அறக்கட்டளை நிறுவனா் மோகன் காமேஸ்வரன், வருவாய்க் கோட்டாட்சியா் எம். பிரபு, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அடிப்படை வசதிகள் இல்லை: மாற்றுத் திறனாளிகள் வேதனை
மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்குச் செல்ல வாகன வசதி

கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரத்தில் 100% வாக்குப்பதிவு: மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


