தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சாயா்புரத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் 2 போ் கைது

சாயா்புரத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் 2 போ் கைது

Updated On :10 மார்ச் 2024, 12:10 am

தூத்துக்குடி மாவட்டம், சாயா்புரம் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் சாயா்புரம் அருகே கோவங்காடு பகுதியைச் சோ்ந்த அமிா்தலிங்கம் மகன் பால்துரை (34) என்பவரை கொலை செய்த வழக்கில், அதே பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் மந்திரம் என்ற சின்னத்துரை (40), விஜயகுமாா் மகன் ராஜேஷ் என்ற ராஜேஷ்குமாா் (24) ஆகியோரை சாயா்புரம் போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி உத்தரவின்படி, அவா்கள் இருவரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டதில் கைதுசெய்தனா்.