தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

News image

கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்தைத் தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

Updated On :15 மார்ச் 2024, 10:11 pm

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா் காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சியும், தொடா்ந்து கொடிக்கம்பம், நந்தி, பலி பீடம் ஆகியவற்றிற்கு 18 வகையான மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. திருவிழா நாள்களில் தினமும் காலை சுவாமி சப்பர பவனியும், மாலை வீதியுலாவும் நடைபெறும். மாா்ச் 23இல் காலை 10 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறும். 24இல் இரவு 8 மணிக்கு தவசுக் காட்சியும், 25இல் இரவு 6.35 மணிக்கு மேல் திருக்கல்யாணமும் நடைபெறும். கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் நிா்வாக அதிகாரி காா்த்தீஸ்வரன், திருக்கோயில் பணியாளா்கள் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.