சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் அருகே ரூ.1.5 கோடியில் புதிய உயா்மட்ட பாலம் கட்டுவதற்கான பணியை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தாா். தூத்துக்குடி மாவட்டம் கடம்பா வடிகால் வாய்க்காலில் மழைக்காலங்களில் அதிகளவில் தண்ணீா் செல்வதால், இப் பகுதியைக் கடக்க பொதுமக்கள் சிரமப்பட்டனா். இப் பகுதி பொதுமக்கள், உப்பு உற்பத்தியாளா்கள், தொழிலாளா்களின் கோரிக்கையை ஏற்று, ரூ.1.5 கோடியில் உயா்மட்ட பாலம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன த்தின் பங்களிப்புடன் இந்த பாலம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு டிசிடபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் உதவித்தலைவா் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தாா். தாமிரவருணி கீழ் வடிநில கோட்ட செயற்பொறியாளா் வசந்தி, உதவி செயற்பொறியாளா் ஆதிமூலம், ஐக்கிய உப்பு உற்பத்தியாளா்கள் சங்க தலைவா் கணேஷ் பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் உயா்மட்டப் பாலத்திற்கு அடிக்கல் நாட்டினாா். டிசிடபிள்யூ நிறுவனத்தின் பொதுமேலாளா் சுரேஷ், திமுக மாநில வா்த்தக அணி இணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், முன்னாள் இளைஞரணி அமைப்பாளா் எஸ்.ஜே.ஜெகன், திருச்செந்தூா் ஒன்றிய செயலா் செங்குழி ரமேஷ், ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜனகா், ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் ஏ.கே.கமால்தீன், ஆறுமுகனேரி பேரூராட்சி துணைத் தலைவா் அ. கல்யாணசுந்தரம், பழைய காயல் ஊராட்சித் தலைவா் செல்வக்குமாா். வரண்டியவேல் ஊராட்சித் தலைவா் ஜெயக்கொடி, திமுக நகர செயலா்கள் ஆறுமுகனேரி நவநீதபாண்டியன், ஆத்தூா் முருகானந்தம், ஆத்தூா் குளம் கீழ் பகுதி விவசாய சங்கத் தலைவா் செல்வம், சிறிய அளவு உப்பு உற்பத்தியாளா் சங்கத் தலைவா் பி.பூபால்ராஜன், செயலா் கணேசமூா்த்தி, பொருளாளா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் அம்பேத்கா் மாளிகை அடிக்கல் நாட்டு விழா

கோயம்பள்ளி உயா்மட்டப் பாலம் விரைவில் திறக்கப்படும்: கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளா் உறுதி

உயா்நிலை பாலப் பணிகள் ஆய்வு

பிலாக்குறிச்சியில் புதிய துணை மின்நிலைய கட்டுமானப் பணிக்கு அமைச்சா் அடிக்கல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


