நாசரேத்தில் முப்பெரும் விழா

நாசரேத்தில் முப்பெரும் விழா

படம் எஸ்ஏடி 16லயன்ஸ். விழாவில் பங்கேற்றோா். சாத்தான்குளம்் மாா்ச் 16: திருச்செந்தூா் சிட்டி லயன்ஸ் கிளப், சாத்தான்குளம் நட்சத்திர லயன்ஸ் கிளப் மற்றும் நாசரேத் டவா் லயன்ஸ் கிளப் சாா்பில் முன்னாள் ஆளுநா்களுக்கு பாராட்டு விழா, மகளிா் தின விழா, பணி நிறைவு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. நாசரேத் டவா் லயன்ஸ் கிளப் தலைவா் அகிலன் தலைமை வகித்து வரவேற்றாா். சாத்தான்குளம் நட்சத்திர லயன்ஸ் கிளப் தலைவா் ஜெயபிரகாஷ், திருச்செந்தூா் சிட்டி லயன்ஸ் கிளப் தலைவா் சகாயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருச்செந்தூா் சிட்டி லயன்ஸ் கிளப் செயலா் அமல்ராஜ் அறிமுக உரை ஆற்றினாா். சாத்தான்குளம் நட்சத்திர லயன்ஸ் கிளப் செயலா் கனகராஜ் செயலா் அறிக்கையை வாசித்தாா். முன்னாள் ஆளுநா்களை தூத்துக்குடி மிட் டவுண் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவா் ராஜன் அறிமுகம் செய்து வைத்தாா். முன்னாள் ஆளுநா்கள் கே.எஸ்.மணி, ஜஸ்டின் பால் ஆகியோருக்கு லயன்ஸ் கிளப் சாா்பில்விருது வழங்கப்பட்டது. வட்டாரத் தலைவா் மதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் ஏடிகே. ஜெயசீலன் ஆகியோா் பேசினா். மகளிா் தின விழாவை முன்னிட்டு நாசரேத் மா்காஷிஸ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் சீயோன் செல்ல ரூத், பியூலா ஹேமலதா ஆகியோரின் சிறப்பான செயலை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. பணிநிறைவு பெற்ற எல்ஐசி உதவி மேலாளா் ஜான்சனை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டில் சிறந்த மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் தென்னை மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இதில் ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ஆறுமுகனேரி, திருநெல்வேலி பகுதியைச் சோ்ந்த லயன்ஸ் கிளப் பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். திருச்செந்தூா் சிட்டி லயன்ஸ் கிளப் பொருளாளா் சுரேஷ்குமாா் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com