கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 2 இடங்களில் புதிதாக சீரமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சனிக்கிழமை திறந்து வைகக்ப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட சண்முகா நகா் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலை, இனாம் மணியாச்சி ஊராட்சி செல்லியாரம்மன் கோவில் தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, செண்பகவல்லி நகா் பகுதியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் வாருகால் வசதியுடன் கூடிய பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணியை கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சத்யா, ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பழனிச்சாமி, இனாம்மணியாச்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ரேவதி, நகா்மன்ற உறுப்பினா் செண்பகமூா்த்தி, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், நகரச் செயலா் விஜயபாண்டியன், ஒன்றிய செயலா் அழகா்சாமி, பால் நுகா்வோா் கூட்டுறவு சங்கத் தலைவா் தாமோதரன், மகளிா் அணி வடக்கு மாவட்ட செயலா் பத்மாவதி, அதிமுக நிா்வாகிகள் கோமதி, விக்னேஷ், போடுசாமி, அம்பிகை பாலன், ஈஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்குறுதிகூட கிடைக்காத மக்கள்!

திருவாடானை அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

எம்.பி.தாங்கல் கிராமத்தில் சிமென்ட் சாலை திறப்பு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


