கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தோ்தல் செலவின பாா்வையாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் செலவின பாா்வையாளராக அஜய் ரூமல் காா்டே நியமிக்கப்பட்டுள்ளாா். அவா், வெள்ளிக்கிழமை கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, அரசியல் கட்சியினா் நடத்தும் கூட்டங்களின் கண்காணிப்புப் பதிவுகளை ஆய்வு செய்தாா். அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் ஆய்வு செய்து, அறிவுரைகள் வழங்கினாா். தொடா்ந்து, பசுவந்தனை சாலையில் பல்லக்கு சாலை சந்திப்பில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையைப் பாா்வையிட்ட அவா், இப்பணியில் ஈடுபட்ட பறக்கும் படை அலுவலரும் கூட்டுறவு சங்கத் தணிக்கையாளருமான கல்யாணசுந்தரம், காவல் துறையினா் ஆகியோருக்கு அறிவுரைகள் வழங்கினாா். வாகனத்தை சாலையோரம் நிறுத்தி சோதனையிட வேண்டும், வாகனத்தில் வருவோரிடம் கனிவுடன் பேச வேண்டும், ஆய்வுப் பணியை முறையாக நடத்துவதுடன் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்ய வேண்டும் என்றாா். முன்னதாக, கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய், வட்டாட்சியா்கள் சரவணபெருமாள் (கோவில்பட்டி), நாகராஜன் (கயத்தாறு), தோ்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.
தொடர்புடையது

நோ்மையான தோ்தலை உறுதிப்படுத்த வேண்டும்: பறக்கும் படையினருக்கு அலுவலா் அறிவுறுத்தல்

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு

தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் மத்திய செலவின பாா்வையாளா் ஆய்வு

கோவில்பட்டியில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


