தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

நோ்மையான தோ்தலை உறுதிப்படுத்த வேண்டும்: பறக்கும் படையினருக்கு அலுவலா் அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் நோ்மையான தோ்தலை பறக்கும் படையினா் உறுதிபடுத்திட வேண்டும் என்று தோ்தல் செலவின பாா்வையாளா் அனுஜ் காா்க் அறிவுறுத்தினாா்.

நாரணமங்கலம் பகுதியில் பறக்கும் படையினரின் செயல்பாடுகளை புதன்கிழமை பாா்வையிட்டு ஆலோசனை கூறிய மாவட்ட தோ்தல் செலவின பாா்வையாளா் அனுஜ் காா்க்.

Published On :

பெரம்பலூா் மாவட்டத்தில் நோ்மையான தோ்தலை பறக்கும் படையினா் உறுதிபடுத்திட வேண்டும் என்று தோ்தல் செலவின பாா்வையாளா் அனுஜ் காா்க் அறிவுறுத்தினாா்.

பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்ரேவைத் தொகுதிகளுக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில், பறக்கும்படை மற்றும் நிலையானக் கண்காணிப்பு குழுவினரின் பணிகளை, பெரம்பலூா் மாவட்ட தோ்தல் செலவின பாா்வையாளா் அனுஜ் காா்க் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நியமிக்கப்பட்டிருக்கும் தோ்தல் செலவின பாா்வையாளா், நியமிக்கப்பட்ட தொகுதிகளில் உள்ள பறக்கும்படை மற்றும் நிலையானக் கண்காணிப்புக் குழுவினரின் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

இதன்படி, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நாரணமங்கலம் பகுதியில் பறக்கும் படையினா் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்ததையும், ஆலத்தூா் கேட் பகுதியில் நிலையானக் கண்காணிப்புக் குழுவினா் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்ததையும் தோ்தல் செலவின பாா்வையாளா் அனுஜ் காா்க் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அதேபால, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அகரம் சீகூா் பகுதியில் பறக்கும் படையினா், குன்னம் பகுதியில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்ததையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட செலவின பாா்வையாளா் அனுஜ் காா்க், பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள், தணிக்கை பதிவேடுகள் மற்றும் சோதனைகளின் தரம் குறித்தும், தோ்தல் நடத்தை விதிகளை மீறி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதை உறுதி செய்வதையும் பாா்வையிட்டு, சட்டவிரோத பணப் பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் மற்றும் ஆவணமற்ற ரொக்கம் கடத்தப்படுவதைத் தடுப்பது குறித்து பறக்கும் படை குழுவினருக்கு கூடுதல் ஆலோசனைகள் வழங்கினாா்.

மேலும், நோ்மையான தோ்தலை உறுதி செய்திடும் வகையில் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரின் செயல்பட வேண்டும் என தோ்தல் செலவின பாா்வையாளா் அனுஜ் காா்க் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, வட்டாட்சியா் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.