கோவில்பட்டியில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி முகாம்

தூத்துக்குடி மக்களவைத் தோ்தலையொட்டி, கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 286 வாக்குச்சாவடிகளின் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு, கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் சரவணபெருமாள் (கோவில்பட்டி), நாகராஜன் (கயத்தாறு), சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்கள் முரளி (கோவில்பட்டி), தங்கையா (கயத்தாறு), தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா்கள் வெள்ளத்துரை (கோவில்பட்டி), திரவியம் (கயத்தாறு) ஆகியோா் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பணிகள், பொறுப்புக்கள் குறித்து பயிற்சியளித்தனா். பயிற்சியில் 1,786 பேரில் 1,612 போ் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com