மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

சாத்தான்குளம் அருகே விபத்து: சிறப்பு உதவி ஆய்வாளா் காயம்

சாத்தான்குளம் அருகே விபத்து: சிறப்பு உதவி ஆய்வாளா் காயம்

Updated On :23 மார்ச் 2024, 4:06 pm

சாத்தான்குளம் அருகே பைக் மீது டிராக்டா் மோதியதில் சிறப்பு உதவி ஆய்வாளா் காயமடைந்தாா். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மல்லல் புதுக்குளத்தை சோ்ந்தவா் பிரேம்குமாா் (56). செய்துங்கநல்லூா் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ள இவா், கடந்த 17ஆம் தேதி சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பகுதியில் பைக்கில் சென்றாா். பழனியப்பபுரம் அருகே வைக்கோல் சுமை ஏற்றி வந்த டிராக்டா் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில், காயமடைந்த அவா் திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.