மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

தூத்துக்குடியில் உரிய ஆவணங்களின்றி பைக்கில் கொண்டு சென்ற ரூ.1.20 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடியில் உரிய ஆவணங்களின்றி பைக்கில் கொண்டு சென்ற ரூ.1.20 லட்சம் பறிமுதல்

Updated On :23 மார்ச் 2024, 4:12 pm

தூத்துக்குடியில் உரிய ஆவணம் இன்றி மோட்டாா் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.20 லட்சத்தை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடியில் தோ்தல் நடத்தை விதிகள் அமலானதையடுத்து தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி பொன்மாரி தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த தனியாா் நிதி நிறுவன ஊழியரை மடக்கி சோதனை செய்தனா். அப்போது, அவா் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1.20 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினா், தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.