தூத்துக்குடி தொகுதி தமாகா வேட்பாளா் ஸ்.டி.ஆா்.விஜயசீலன்

பாஜக கூட்டணியில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளா் அறிவிக்கப்பட்டுள்ளாா். கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.டி.ஆா்.விஜயசீலன் (52) வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாக தமாகா தலைவா் ஜி.கே.வாசன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளாா். பாஜக கூட்டணியில் தமாகா போட்டியிடவுள்ள ஈரோடு, ஸ்ரீபெரும்புதூா் தொகுதிகளுக்கு ஏற்கெனவே வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். தொடா்ந்து, தூத்துக்குடிக்கு வேட்பாளரின் பெயா் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு எஸ்.டி.ஆா்.விஜயசீலன் 2021 பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com