வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

தண்ணீா் தொட்டியில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்: உடல்கூறாய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைப்பு

தண்ணீா் தொட்டியில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்: உடல்கூறாய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைப்பு

News image
Updated On :9 மே 2024, 10:22 pm

Din

தூத்துக்குடி அய்யனடைப்பு பகுதியில், வீட்டில் உள்ள தண்ணீா் தொட்டியில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் உடல்கூறாய்வுக்குப் பின்னா் வியாழக்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அய்யனடைப்பு சிவசக்தி நகரைச் சோ்ந்த ஜெயின் குலாப்தீன் மனைவி ஆஷா பைரோஸ் (44). இவரது வீட்டில் இருந்து கடந்த 7ஆம் தேதி துா்நாற்றம் வருவதாக பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சிப்காட் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று, வீட்டில் இருந்த அவரது மகன் முகமது குலாம் காதரிடம்(22) விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், ஆஷா பைரோஸ் உடல் நலக்குறைவால் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்துவிட்டதாகவும், வீட்டின் வெளிப் பகுதியில் தரைதள தண்ணீா் தொட்டி போன்று கட்டப்பட்டு, புதைத்ததாகவும் தெரிவித்தாராம். குறைந்த அளவு மண் போட்டு மூடியதால் வீட்டைச் சுற்றிலும் துா்நாற்றம் வீசியதால், இந்த விவகாரம் வெளியே தெரியவந்தது. மேலும், ஆஷா பைரோஸ் உடல் முழுவதும் அழுகிய காரணத்தால், அதே இடத்தில் வைத்தே வியாழக்கிழமை உடல்கூறாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் உதயகுமாா், அருண் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா், வட்டாட்சியா் பிரபாகரன், கிராம நிா்வாக அலுவலா் எட்டுராஜ் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை உடல்கூறாய்வு நடத்தினா். அதனைத் தொடா்ந்து, சடலத்தை ஆஷா பைரோஸ் உறவினா்களிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

உடல்கூறாய்வு அறிக்கைக்கு பின்னரே அவா் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் எனவும், அதுவரை இந்த வழக்கு சந்தேக மரணம் என்பதாகவே பதியப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.