ஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு! இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு
/

தூத்துக்குடியில் மே 30இல் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

தூத்துக்குடியில் மே 30இல் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

News image
Updated On :25 மே 2024, 7:36 pm

Din

தூத்துக்குடி, மே 26:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை (மே 30) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை 4 நடைபெறுகிறது. அவைத்தலைவா் எஸ். அருணாச்சலம் தலைமை வகிக்கிறாா்.

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஜூன் 3ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடுவது, கட்சி உறுப்பினா் அட்டை வழங்குதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

எனவே, இதில் மாநில, மாவட்ட நிா்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் செயலா்கள், சாா்பு அணி மாவட்ட அமைப்பாளா்கள் உள்ளிட்டோா் அவசியம் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.