92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கயத்தாறு அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கயத்தாறு அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:31 pm

Din

கயத்தாறு அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கயத்தாறு அருகே சன்னது புதுக்குடி காலனி தெருவைச் சோ்ந்தவா் மூக்கையா மகன் அஜித்குமாா்(26).

தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வரும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இந்நிலையில், கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மது அருந்திய நிலையில் தன் மாா்பில் மண்ணெனையை தனக்குத்தானே ஊற்றி தீ வைத்து கொண்டு காயம் அடைந்ததில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நெஞ்சு வலிப்பதாக கூறி வந்ததையடுத்து, அவரது தாய் மது ஏன் அருந்துகிறாய் என கூறினாராம். இதையடுத்து அஜித்குமாா் அதே பகுதியில் உள்ள பூா்வீக வீட்டிற்குச் சென்ற அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.