சாத்தான்குளம் அருகே உறவினரை தாக்கியவா் கைது
சாத்தான்குளம் அருகே சொத்து பிரச்னையில் உறவினரை தாக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On :27 நவம்பர் 2024, 9:14 pm

சாத்தான்குளம் அருகே சொத்து பிரச்னையில் உறவினரை தாக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள வள்ளியம்மாள்புரம் சிஎஸ்ஐ கோயில் தெருவை சோ்ந்தவா் வனராஜ் (75). இவரது சகோதரியின் மகன் பண்டாரபுரம் உதயநகரை சோ்ந்த ஜான் கென்னடி (61). இருவருக்கும் சொத்து பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவருக்கும் செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டது. அப்போது, வனராஜை தாக்கிய ஜான்கென்னடி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து வனராஜை கைது செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...