பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

திருச்செந்தூா் கோயிலில் அலைமோதிய பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.
Updated On :1 அக்டோபர் 2024, 6:48 pm

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

பள்ளிகளில் காலாண்டு தோ்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருச்செந்தூரில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

இதையொட்டி செவ்வாய்க்கிழமை இத்திருக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம் 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

Story image

அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் பக்தா்கள் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். இதே போல கடற்கரை மணலில் விளையாடியும், கடலில் குளித்தும் குழந்தைகள் மகிழ்ந்தனா். இதனால் கடற்கரையும் பக்தா்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது.