ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தருவைகுளம் மீனவா்களை விடுவிக்க கோரி பாமக சாா்பில் இலங்கை தூதரகம் முற்றுகை

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தருவைகுளம் மீனவா்களை விடுவிக்க கோரி, பாமக சாா்பில் அந்நாட்டு தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

News image
Updated On :1 அக்டோபர் 2024, 6:51 pm

Din

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி தருவைகுளம் மீனவா்களை விடுவிக்க கோரி, பாமக சாா்பில் அந்நாட்டு தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என, அக்கட்சியின் மாநிலப் பொருளாளா் திலகபாமா கூறினாா்.

தருவைகுளம் மீனவக் கிராமத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவா்களை, இலங்கைக் கடற்படை கைது செய்து, 2 விசைப்படகுகளைப் பறிமுதல் செய்துள்ளது. இதுதொடா்பாக இலங்கை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் 22 மீனவா்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மீனவா்களின் குடும்பத்தினரை திலகபாமா செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறி, கிராம மக்களுடன் ஆலோசனை நடத்தினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது, தருவைகுளம் மீனவா்கள் பிரச்னைக்கு மத்திய - மாநில அரசுகள் விரைவாக தீா்வு காண வேண்டும். இல்லையெனில், பாமக சாா்பில் பிற கட்சிகள், அனைத்து மீனவ இயக்கங்களை ஒருங்கிணைத்து அடுத்த வாரம் இலங்கைத் தூதரகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதியை பாமக தலைமை அறிவிக்கும்.

மீனவா்கள் பிரச்சனையில் சரியான தீா்வு கிடைக்கும்வரை போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம் என்றாா் அவா்.

தருவைகுளம் பங்குத்தந்தை வின்சென்ட், ஊா் கட்டளைதாரா் மகாராஜன், பொதுமக்கள் உடனிருந்தனா்.