மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

காந்தி ஜெயந்தி, காமராஜா் நினைவு தினம்: சிலைகளுக்கு மரியாதை

தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி, காமராஜா் நினைவு தினத்தை முன்னிட்டு, அவா்களது சிலைகளுக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image

தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கனிமொழி எம்.பி. உடன், அமைச்சா் பெ. கீதாஜீவன், ஆட்சியா் க.இளம்பகவத், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா்.

Updated On :2 அக்டோபர் 2024, 10:31 pm

Din

தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி, காமராஜா் நினைவு தினத்தை முன்னிட்டு, அவா்களது சிலைகளுக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மகாத்மா காந்தி 156ஆவது பிறந்த நாள், முன்னாள் முதல்வா் காமராஜரின் 49ஆவது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி, காமராஜா் சிலைகளுக்கு மாவட்ட ஆட்சியா் க. இளம் பகவத் தலைமையில், மக்களவை உறுப்பினா் கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில், மேயா் ஜெகன் பெரியசாமி, வட்டாட்சியா் முரளிதரன், வருவாய் ஆய்வாளா் சரவணவேல்ராஜ், திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், துணை மேயா் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் பாலகுருசாமி, நிா்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.