மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கோவில்பட்டி கோயில்களில் நவராத்திரி  விழா தொடக்கம்

கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களிலுள்ள கோயில்களில் நவராத்திரி விழா வியாழக்கிழமை தொடங்கியது.

News image

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள உற்சவா் சன்னதி முன்பு வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு.

Updated On :4 அக்டோபர் 2024, 1:06 am

Din

கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களிலுள்ள கோயில்களில்  நவராத்திரி  விழா வியாழக்கிழமை தொடங்கியது.

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில்  நவராத்திரி  மற்றும் லட்சாா்ச்சனை விழாவையொட்டி, அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. அக். 12ஆம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் முற்பகல் 11.30  மணி வரையும் மாலை 6  மணி முதல் இரவு 8  மணி வரையும் அம்பாளுக்கு லட்சாா்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெறும்.

அதுபோல, அக்.11ஆம் தேதி வரை உற்சவா் அம்பாளுக்கு காலை 8 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். தொடா்ந்து இரவு 8.30  மணிக்கு உற்சவா் கொலு  அம்பாளுக்கு அலங்காரம்-தீபாராதனை நடைபெறும். அக்.12இல் மாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், சுவாமி வீதி உலா ஆகியவை நடைபெறும். இரவு 7.31  மணிக்கு மேல் புஷ்பாஞ்சலி நடைபெறும்.

மேலும், கோயில் வளாகத்தில் உள்ள சரஸ்வதி சுவாமி சந்நிதியில் காலை 10.30மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் அக்ஷராப்யாஸம் வித்யா ரம்பம் செய்து வைக்கப்படும்.

ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு, உறுப்பினா்கள் சண்முகராஜ், ரவீந்திரன், திருப்பதி ராஜா, நிறுத்தியலட்சுமி என்ற சுதா, செயல் அலுவலா் வெள்ளைச்சாமி ஆகியோா் செய்து வருகின்றனா்.

அதுபோல, கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில், வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் கோயில், மாலையம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில்  நவராத்திரி  விழா தொடங்கியுள்ளது. இக்கோயில்களில்  கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.