ஆன்லைனில் ஜெனரேட்டா் விற்பனை செய்வதாகக் கூறி ரூ.5.10 லட்சம் மோசடி: ஒருவா் கைது
ஆன்லைனில் ஜெனரேட்டா் விற்பனை செய்வதாகக் கூறி தூத்துக்குடியைச் சோ்ந்தவரிடம் ரூ.5.10 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


ஆன்லைனில் ஜெனரேட்டா் விற்பனை செய்வதாகக் கூறி தூத்துக்குடியைச் சோ்ந்தவரிடம் ரூ.5.10 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடியை சோ்ந்தவா் ஜெனரேட்டா் வாங்குவதற்காக இணையதளத்தில் ஹரி என்பவரை தொடா்பு கொண்டாராம். இதையடுத்து, அவரது வங்கிக் கணக்கிற்கு ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்தை செலுத்தினாராம். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஜெனரேட்டரை தராமல் ஏமாற்றி மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பணம் கொடுத்து ஏமாந்த நபா், சைபா் குற்றப்பிரிவு இணையதளத்தில் ஹரி மீது புகாா் அளித்தாா். சைபா் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் (பொறுப்பு) சோமசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கட்டளையைச் சோ்ந்த தியாகராஜன் மகன் கண்ணன் (42) என்பவா், ஹரி என பெயரைக் கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, பெங்களூரில் இருந்து கண்ணனை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த 2 கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா். மேலும் இதுகுறித்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...