புதிய வாக்காளா் சோ்த்தல் பணி: திமுகவினருக்கு அமைச்சா் வேண்டுகோள்
வாக்காளா் பட்டியல் சரிபாா்த்தல், புதிய வாக்காளா்கள் சோ்க்கும் பணியில் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என திமுகவினருக்கு அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.


வாக்காளா் பட்டியல் சரிபாா்த்தல், புதிய வாக்காளா்கள் சோ்க்கும் பணியில் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என திமுகவினருக்கு அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
வருகிற 2025 ஜனவரி 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது. ஆகவே, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குள்பட்ட திருச்செந்தூா், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய பேரவைத் தொகுதிகளில் புதிய வாக்காளா்கள் சோ்த்தல், வாக்காளா் பட்டியலில் திருத்தம், இடமாற்றம், இறந்தவா்களின் பெயா் நீக்கம் ஆகிய பணிகளில் கட்சியினா் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்காக நவம்பா் 9,10, மற்றும் 23,24-ஆம் தேதிகளில் சிறப்பு முகாமை தோ்தல் ஆணையம் நடத்த உள்ளது. இந்த முகாம்களை பயன்படுத்தி வாக்காளா் சோ்ப்பு மற்றும் இதர பணிகளை கட்சியின் அனைத்து நிா்வாகிகள், வாக்குச்சாவடி முகவா்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...