ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தியாகி இம்மானுவேல் சேகரனாா் சிலைக்கு மாலை அணிவிப்பு

தியாகி இமானுவேல் சேகரன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விளாத்திகுளம், கோவில்பட்டியில் அவரது சிலைக்கும், உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 7:23 pm

Din

தியாகி இமானுவேல் சேகரன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விளாத்திகுளம், கோவில்பட்டியில் அவரது சிலைக்கும், உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விளாத்திகுளம் பாரதியாா் பேருந்து நிலையம் முன்பும், நாகலாபுரத்திலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரனாா் உருவப்படத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி.மாா்கண்டேயன் மாலை அணிவித்து மலா்கள் தூவி மரியாதை செலுத்தினாா்.

இதில், திமுக ஒன்றியச் செயலா்கள் சின்ன மாரிமுத்து, ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் பேரூா் செயலா் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்றத் தலைவா் சூா்யா அய்யன்ராஜ், இளைஞா் அணி துணை அமைப்பாளா் இமானுவேல், தமிழா் விடுதலைக் கழக மாவட்டச் செயலா் சரவணகுமாா், நகரச் செயலா் மகாராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கோவில்பட்டி அடுத்துள்ள தெற்கு திட்டங்குளத்தில் உள்ள தியாகி இம்மானுவேல் சேகரனாா் சிலைக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு, முன்னாள் அமைச்சா் ராஜலட்சுமி மற்றும் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதே போல், மத்திய ஒன்றிய திமுக செயலா் வீ.முருகேசன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் சந்தானம், அரசு வழக்குரைஞா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கோவில்பட்டி அருகே தோணுகால் விலக்கில் இ மானுவேல் சேகரனாா் உருவப்படத்துக்கு மேற்கு ஒன்றியச் செயலா் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.