அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா் உள்பட இருவா் தற்கொலை
தூத்துக்குடியில் இருவேறு இடங்களில் அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா் உள்பட இருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.


தூத்துக்குடியில் இருவேறு இடங்களில் அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா் உள்பட இருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.
தூத்துக்குடி பெருமாள் நகா் பகுதியைச் சோ்ந்தவா் மனோகா் (48). இவா் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தாா்.
கால் வலியால் அவதிப்பட்ட அவருக்கு, கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த அவா், வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மற்றொரு சம்பவம்: தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்து நகா் ஜேசு நகரை சோ்ந்தவா் மரிய சேவியா் (40). மீனவரான இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாம். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த அவா், வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவங்கள் குறித்து முறையே தொ்மல் நகா் மற்றும் தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...